ரிஸ்க் இல்லாத லாபம்..!! வெறும் ரூ.1,000 முதலீடு போதும்..!! வட்டி மூலமே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..!!

w 1280imgid 01jw7v6pb6rnyebgvtfc6fwzj6imgname tamil news 48 1748315101542

எதிர்கால தேவைகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் இருந்தாலும், “எங்கு முதலீடு செய்தால் அசல் பாதுகாப்பாக இருக்கும்?” என்ற கேள்விதான் பலரது தயக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. பங்குச்சந்தை மற்றும் இதர முதலீடுகள் அதிக லாபம் தந்தாலும், அவற்றில் இருக்கும் ரிஸ்க் நடுத்தர வர்க்கத்தினரை தபால் நிலையங்களை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘தேசிய சேமிப்புச் சான்றிதழ்’ (National Savings Certificate – NSC) திட்டம், எவ்வித ஆபத்துமின்றி சீரான வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது.


இந்த திட்டத்தின் சிறப்பம்சமே இதன் எளிமைதான். ஒருவர் வெறும் 1,000 ரூபாயில் இருந்தே தனது முதலீட்டை தொடங்க முடியும். அதிகபட்ச முதலீட்டிற்கு எவ்வித கட்டுபாடும் இல்லை என்பது வசதி படைத்தோருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. தற்போது இத்திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கூட்டு வட்டி முறையில் வட்டி கணக்கிடப்படுவதால், 5 ஆண்டுகால முதிர்வு முடிவில் முதலீட்டாளர்களுக்குக் கணிசமான லாபம் கிடைக்கிறது. உதாரணமாக, சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்தால் வட்டி மூலமாகவே சுமார் 2 லட்சம் ரூபாய் வரை ஈட்ட முடியும் என நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் என்பதால், நீண்ட காலச் சேமிப்பிற்கு இது மிகவும் ஏற்றது. அரசாங்கத்தின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், பணத்திற்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு. முதிர்வு காலம் முடிந்தவுடன் அசல் தொகையும் வட்டியும் நேரடியாக வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு அஞ்சுபவர்களும், ஓய்வுக்காலத்திற்காக சேமிக்க விரும்புபவர்களும் தபால் அலுவலகத்தின் இந்த சூப்பர் ஹிட் திட்டத்தை தாராளமாக பரிசீலிக்கலாம்.

Read More : 77 வயது மூதாட்டியை சிதைத்த போதை இளைஞர்..!! பணத்திற்காக பாலியல் பலாத்காரம்..!! குலுங்கிய குடியாத்தம்..!!

CHELLA

Next Post

அஞ்சறை பெட்டியின் அதிசயம்..!! வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

Mon Jan 26 , 2026
ஒவ்வொரு இந்திய இல்லத்தின் சமையலறையிலும் அஞ்சறை பெட்டியின் மிக முக்கியமான அங்கமாக விளங்குவது பூண்டு. வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருளாக பூண்டை பார்க்க முடியாது. இது உண்மையில் இயற்கை நமக்கு அளித்த ஒரு மகத்தான மருந்தகம். “உணவே மருந்து” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் பூண்டு, பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. நவீன மருத்துவ ஆய்வுகள் பூண்டு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி […]
garlic 11zon

You May Like