77வது குடியரசு தினம்… டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் திரௌபதி முர்மு..! சுபான்சு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார்..!

ashok chakra subanshu

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சேவைகள் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏபிஎஸ் சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் இருந்தனர்..

இந்த குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.. குதிரைகள் பூட்டப்பட்ட பாரம்பரியமான சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைத்து செல்லப்பட்டார்.. சிறப்பு விருந்தினர்களான ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் 77-வது குடியரசு தின விழாவிற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார்..

இதையடுத்து குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் மூவர்ண கொடியை திரௌபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன..

இந்த விழாவில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் சென்ற முதல் இந்திய வீரரான் சுபான்சு சுக்லாவுக்கு இந்த விருது வழங்கப்படது.. தொடர்ந்து குடியரசு தின அணிவுகுப்புகள் நடைபெற்று வருகின்றன..

RUPA

Next Post

காலையில் எழுந்ததும் கண்களுக்கு கீழே வீக்கம் இருக்கா? இதற்கு என்ன காரணம் தெரியுமா?

Mon Jan 26 , 2026
கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கம் அல்லது ‘பெரியோர்பிட்டல் எடிமா’ என்பது பலரை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இரவில் போதுமான உறக்கம் எடுத்தாலும், காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருந்தால், உங்கள் முகம் கவர்ச்சியாகத் தெரியாது. இது பொதுவாக வீங்கிய கண்கள் என்று அழைக்கப்படுகிறது. கண் வீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்: நமக்கு வயதாகும்போது, ​​கண் இமைகளைச் சுற்றியுள்ள தசைகளும் திசுக்களும் பலவீனமடைகின்றன. இதனால் கண்களைச் சுற்றியுள்ள கொழுப்புத் தளர்வடைகிறது. அந்தப் பகுதியில் திரவம் […]
eye care 1

You May Like