குடியரசு தின விழாவில் கம்பீரமாக அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார வாகனம்..! ஜல்லிகட்டு முகப்பு..!

tn tableau r day 1

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார். பின்னர் 77-வது குடியரசு தின விழாவிற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார்..

இதையடுத்து குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் மூவர்ண கொடியை திரௌபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன..

இந்த விழாவில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் சென்ற முதல் இந்திய வீரரான் சுபான்சு சுக்லாவுக்கு இந்த விருது வழங்கப்படது.. தொடர்ந்து குடியரசு தின அணிவுகுப்புகள் நடைபெற்று வருகின்றன..

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் விழாவில் அசாம். சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.. மேலும் குடியரசு தின விழாவில் கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களின் அலங்கார ஊர்தி வாகனங்களும் அணிவக்த்து சென்றன..

அதே போல் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, புதுவை, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாம் உள்ளிட்ட வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது..

குறிப்பாக தமிழக அரசின் வாகனத்தில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.. தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர்..

Read More : 2026 குடியரசு தின விழாவில் கவனம் பெற்ற பிரதமர் மோடியின் வண்ணமயமான டர்பன்..! கடந்த கால பாணிகளின் ஓர் பார்வை..!

RUPA

Next Post

Flash : முற்றும் மோதல்..! ஆளுநர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு..! அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள்..!

Mon Jan 26 , 2026
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை..  மேலும் தமிழக அரசை பற்றி பொது இடங்களிலும் ஆளுநர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதுமட்டுமின்றி 2023. […]
rn ravi 2025

You May Like