நீங்க 6 மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் சாகணுமா..? ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.. முதல்வர் விஜய்யை விளாசிய இபிஎஸ்..!

vijay eps

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து, முதல்வரின் நேற்றைய திருச்சி பேச்சு குறித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார். இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்?


மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார். மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்..

கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?

“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை! தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?

தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : வரலாறு படித்திருந்தால் தெரிந்திருக்கும்.. ஸ்கிரிப்ட் படித்தால் எப்படி தெரியும்..? CM விஜய்க்கு திமுகவின் எழிலன் தரமான பதிலடி..!

English Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has severely criticized Chief Minister Vijay regarding the law and order situation in Tamil Nadu, as well as the Chief Minister’s speech delivered yesterday in Trichy.

RUPA

Next Post

UPI பயனர்கள் கவனத்திற்கு..! ஜூன் 1, 2026 முதல் புதிய விதிகள் அமல்.. முழு விவரம் இதோ..!

Tue Jun 2 , 2026
நீங்கள் ஒரு UPI பயனராக இருந்தால், ஜூன் 1, 2026 முதல் அமலுக்கு வரும் UPI விதி மாற்றங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் கட்டணங்களைச் செலுத்துவதாக இருந்தாலும், செலவுகளைப் பகிர்ந்துகொள்வதாக இருந்தாலும் அல்லது நண்பர்களுக்குப் பணம் அனுப்புவதாக இருந்தாலும், இந்த விதி மாற்றங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) […]
upi aug 1 new rule 11zon

You May Like