தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்தார்..
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மாற்றுக் கட்சியினர் இணையும் மாபெரும் இணைப்பு விழா நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர்.. ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் 10,000 பேர் திமுகவில் இணைந்தனர்.. இப்படி ஒரே நாளில் 10,000 பேர் திமுகவில் இணைந்துள்ளது தேர்தல் நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, ஒரு வாரத்திற்குள் இந்த சிறப்புவாய்ந்த இணைப்பு விழாவை நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.. நான் எதிர்பார்த்ததை விட வைத்திலிங்கம் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக உடைந்து சின்னாபின்னமாக மாறியது.. அந்த காலக்கட்டத்தில் சட்டமன்றத்தில் வைத்திலிங்கம் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருப்பார்.. சுயமரியாதை உடன் என்னால் பணியாற்ற முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு இருந்துள்ளது எனக்கு இப்போது தான் புரிகிறது.. மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும் வகையில் பணிபுரிவோம்.. வெல்வோம் 200, படைப்போம் வரலாறு, வெல்வோம் ஒன்றாக என்று கூறி தாய்க் கழகத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More : Flash : முற்றும் மோதல்..! ஆளுநர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு..! அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள்..!



