முட்டையை ஃப்ரிட்ஜ் கதவில் வைக்காதீங்க… நிபுணர்கள் விடுக்கும் முக்கிய எச்சரிக்கை!

WhatsApp Image 2026 08 05 at 2.27.20 PM

வீடுகளில் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பெரும்பாலானோர் ஃப்ரிட்ஜ் கதவில் இருக்கும் பிரத்யேக முட்டை டிரேயில்தான் அவற்றை வைக்கிறார்கள். வசதிக்காக செய்யப்படும் இந்தப் பழக்கம், முட்டையின் தரத்தை பாதிக்கக்கூடும் என உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃப்ரிட்ஜ் கதவு அடிக்கடி திறக்கப்பட்டு மூடப்படுவதால், அந்தப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த வெப்பநிலை மாற்றம் முட்டைகளின் தரத்தை விரைவாகக் குறைக்கக்கூடும்.


குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு முட்டைகளை சேமித்து வைப்பவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். முட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனில், ஃப்ரிட்ஜின் உள் தட்டுகளில், நிலையான குளிர்ச்சியுடன் இருக்கும் பகுதியில் வைப்பதே சிறந்தது. மேலும், முட்டைகளை வாங்கி வந்த அட்டைப்பெட்டியிலேயே வைத்திருப்பது ஈரப்பத மாற்றத்திலிருந்தும், மற்ற உணவுப் பொருட்களின் வாசனை உறிஞ்சுவதிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.

அதேபோல், முட்டைகளை கழுவி வைத்து ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையான நேரத்தில் மட்டுமே அவற்றைக் கழுவுவது நல்லது. ஏற்கனவே கழுவப்பட்ட முட்டைகளை வாங்கியிருந்தால், அவற்றை உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி சேமிக்க வேண்டும். சமையலறையில் கடைப்பிடிக்கும் சிறிய பழக்கங்கள்கூட உணவின் தரத்தையும், குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கக்கூடும். எனவே, முட்டைகளை சரியான இடத்தில் சேமிக்கும் பழக்கத்தை இப்போதே பின்பற்றுமாறு உணவு பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Also Read: கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்… மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு 2 குழந்தைகளுடன் மாயமான கணவர்!

Saranya

Next Post

‘நீதிமன்ற அவமதிப்பு’ வார்த்தையை கேட்டு பயந்த காலம் மலையேறிவிட்டது..! ஐகோர்ட் அதிருப்தி..!

Thu Aug 6 , 2026
நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் செந்தில்குமார் என்பவரை, திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்குத் துறை நிர்வாகம் கடந்த 2025 ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்தது. அடுத்த நான்கு மாதங்களிலேயே அவரை மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து, அவர் உயர் […]
chennai high court 11zon

You May Like