“உங்க அறிவாளித்தனம் தான் உலகத்திற்கே தெரியும்.. எதையாவது உளறாதீங்க..” செல்லூர் ராஜூவுக்கு சினேகன் பதிலடி..!

snehan sellur raju

கமல் அரசியலில் உலகநாயகனாக மாறுவார் என நினைத்தால் நகைச்சுவை நாயகனாகிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசியிருந்தார்.. மேலும் ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என டிவியை உடைத்த உலகநாயகன் கடைசியில்  இந்த நிலையில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்..


இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினேகன் “ எந்த கேட்டகரியில் செல்லூர் ராஜுவை சேர்ப்பது என தெரியவில்லை.. எப்போதுமே அரசியல் காமெடியனாக இருந்து விடப்போகிறீர்களா? ஊடகங்கள் உங்களை நோக்கி மைக்கை நீட்டுவதே இன்றும் ஏதும் உளறிக் கொட்டுவீர்கள்.. பொழுது போகும் என்பதால் தான்.. செல்லூர் ராஜூ தன்னை அறிவாளி என நினைத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் அறிவாளித்தனம் தான் உலகத்திற்கே தெரியும்..

என்ன பேசுகிறோம்? யாரைப் பற்றி பேசுகிறோம்? என்ற நிதானம் இல்லாமல் செல்லூர் ராஜூ பேசி வருகிறார். இடையில் கழற்றிவிட்ட இபிஎஸ்-இடம் நல்ல பெயர் எடுக்க மைக் கிடைத்தால் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறார். உங்களை மாதிரி காமெடி செய்வதற்கு இங்கு நிறைய அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

எங்கள் தலைவர் ஆளுமைமிக்க தலைவர்.. நம் மாநில மக்களுக்கான அரசியலை கொடுக்க வேண்டும் என்று கூட்டணியில் இருக்கிறோம்.. மாநிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று கூட்டணியில் இருக்கிறோம்.. உங்களை மாதிர் மக்களை ஏமாற்றி சம்பாதித்த சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்று மண்டியிட்டு கிடக்கவில்லை.. எங்கள் தலைவரை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும்.. எங்கள் தலைவர் ஆகாயம் மாதிரி.. உங்க கேட்டகரியில் எங்கள் தலைவர் வரமாட்டார்.. அதற்கு தமிழ்நாட்டில் நிறைய அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.. அவர்களுடன் சடுகுடு விளையாடுங்கள்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது..! இது ஏன் முக்கியமானது?

Tue Jan 27 , 2026
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.. இது இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்றும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வு அமெரிக்காவை கலக்கமடையச் செய்ததாகத் தெரிகிறது. […]
india eu trade deal

You May Like