அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட 501 நபர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இன்று காலை தனது குடும்பத்தினருடன் ராமர் கோவில் புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் கோவிலை சென்றடைந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிறுத்தி வைத்தனர். தனது குடும்பத்தினருக்கும் தனக்கு அருகிலேயே இருக்கை வழங்குமாறு சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.