Flash : பெரும் ஷாக்..! ஒரே நாளில் ரூ.2,960 உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளி விலை ரூ.13,000 உயர்வு..!

jewels new

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ரூ.15,330க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ரூ.1,22,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.13 உயர்ந்து ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.13,000 உயர்ந்து, ரூ.4 லட்சத்திற்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : அப்படிப்போடு..!! விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு..!! ரூ.8,000ஆக உயரும் தொகை..!!

RUPA

Next Post

Flash : பெரும் சோகம்.. விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் காலமானார்..! விமானத்தில் பயணித்த 5 பேரும் பலி..!

Wed Jan 28 , 2026
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு […]
ajit pawar 1 1769572761 1

You May Like