மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியதால் தீப்பிடித்து எரிந்தது..
முதலில் இந்த விமானத்தில் இருந்த அனைவரும் படுகாயமடைந்ததாக கூறப்பட்டது.. அதன்படி அஜித் பவாருக்கும் காயம் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் முதலில் கூறப்பட்டது..
இந்த நிலையில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் 3 நிர்வாகிகள், 2 பயணிகளும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.. விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக கூறப்படுகிறது.. இன்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.. கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..



