fbpx

நெருங்கும் தைப்பூசம்.. திருமணத் தடையை உடைக்க, முருகன் வழிபாடு எப்படி செய்வது.? 

தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் முக்கிய விழாவாக இருப்பது தைப்பூச திருவிழா. இது தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியோடு சேர்ந்து கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் ஜனவரி 25ல் தைப்பூச திருவிழா வருகிறது. இந்த தைப்பூச நாளில் தான் முருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்டார். எனவே இந்த நாளில் திருமணமாகாமல் இருக்கும் நபர்கள் வழிபாடு செய்வது திருமண தடை நீங்கி மணமாலை சூட வழி கிடைக்கும். அத்துடன் இந்த நாளில் வரம் தேடும் பட்சத்தில் நல்ல வரன் கிடைப்பதுடன் இந்த வரன் உறுதியாவதும் நிச்சயம். 

இந்த தைப்பூச நாளில் திருமண பேச்சை ஆரம்பித்தால் அது எந்த தடையும் இல்லாமல் நல்ல விதமாக முடியக்கூடும். இந்த நாளில் விரதம் இருப்பது திருமண தடையை உடைக்க உதவும். தைப்பூச நாளில் ஆரம்பித்து அடுத்த 13 நாட்களுக்கு இவ்விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அன்றாடம் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு முருகனின் படத்தை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதை காலை, மாலை இரண்டு வேளையும் மேற்கொள்ள வேண்டும்.

தேவர்களில் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம். எனவே, தைப்பூசத்தன்று குரு வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலனைத் தரும். அத்துடன், குடும்பத்தில் செல்வ செழிப்பு ஏற்படும். இதுமட்டுமல்லாமல், கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை தழைத்தோங்கும். இந்த தைப்பூச நாளில், முதன் முதலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வை துவங்கலாம். மேலும் மொட்டை அடிப்பது, காது குத்துவது போன்ற சுபகாரியங்களையும் மேற்கொள்ளலாம்.

Rupa

Next Post

"10-வது படிச்சிருந்தா போதும்" சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை.! ₹.19,500/- சம்பளம்.! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.!

Tue Jan 23 , 2024
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஓட்டுநர் பணிக்கு காலியாக உள்ள 13 இடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் பத்தாம் வகுப்பு […]

You May Like