அப்படிப்போடு..!! நிலுவைத் தொகையுடன் கிடைக்கப் போகும் ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..!!

1000 2025

தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், தொடக்கத்தில் விண்ணப்பித்துத் தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது பிற தரவுப் பிழைகளாலோ நிராகரிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்போது ஒரு முக்கிய விடியல் பிறந்துள்ளது. தகுதியிருந்தும் தங்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என கருதிய பெண்கள், அரசின் kmut.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை மேல்முறையீடாகப் பதிவு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கில் குவிந்த இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


இதனைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய் கோட்டாட்சியர்கள் (RDO) தலைமையிலான குழுவினர், இணையதளம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது நேரடி கள ஆய்வை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த ஆய்வின் போது, விண்ணப்பதாரர்களின் உண்மையான பொருளாதாரச் சூழல், வருமான வரி விவரங்கள் மற்றும் பிற தகுதிகள் மிக நுணுக்கமாக மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதால், அதிகாரிகள் களத்திற்குச் சென்று நேரடியாகத் தரவுகளைச் சேகரித்து வருகின்றனர்.

இந்த மறுபரிசீலனை பணிகளின் முடிவில், தகுதியுள்ளவர்களாக கண்டறியப்படும் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அவர்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மனு நிலுவையில் இருந்த காலத்திற்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : திருமண தடை முதல் தீராத நோய் வரை..!! தைப்பூசத்தன்று முருகனை இப்படி வணங்கி பாருங்க..!! வீட்டில் வழிபட சரியான நேரம் எது..?

CHELLA

Next Post

அதிரடி காட்டும் அதிமுக..!! சாரை சாரையாக இணைந்த மாற்றுக் கட்சியினர்..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!

Sat Jan 31 , 2026
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ஒரு முக்கிய அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது. சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்டமான இணைவு விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கியத் தலைவருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தற்போது தமிழக அரசியலில் திமுக, […]
edappadi k palaniswami

You May Like