உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரின் சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் நிர்வாண நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. நான்கு சகோதரர்கள் சேர்ந்து தங்கள் சகோதரனின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் துபாயில் பணியாற்றி வரும் அந்த பெண்ணின் கணவரே தனது சகோதரர்களுக்கு பணம் கொடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபடச் செய்ததும் தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் ரோகித் லோதி ராமச்சந்திரா லோதி சோனு லோதி மற்றும் சிவம் லோதி இவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான நங்கு லோதியை தீவிரமாக தேடி வருகின்றனர். சொந்தக் கணவரே தனது சகோதரர்களிடம் மனைவியை கற்பழித்து கொலை செய்ய பணம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.