ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதே போல் வெள்ளியின் விலையும் இதுவரை இல்லாத உயர்வுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது..
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில், இன்று காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19, 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று காலை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.55,000 குறைந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை குறைந்துள்ளது.. இன்று காலை வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55,000 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.30,000 குறைந்தது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.30,000 குறைந்து ரூ.3.20 லட்சத்திற்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.85,000 கிலோவுக்கு குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Read More : பெற்றோர்களுக்கு பெரும் நிம்மதி..! இனி பள்ளியிலேயே ஆதார் அப்டேட்..! முழு விவரம் இதோ..!



