தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் எம்.ஜி.ஆர் ரேடியோவில் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.. எம்.ஜி.ஆர், காமராஜருக்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.. மேலும் “ தேர்தலில் இந்த மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கின்றனர்.. மக்கள் சக்தியாக நமது அணி ஒரு பக்கம், திமுக கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம், பாஜக தலைமையில் மற்றும் பலர்.. என்று இப்படி எத்தனை பேர் வந்தாலும் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும் தான் முடியும்..
இப்படிப்பட்ட சூழலில் விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்று கேட்கின்றனர்.. பொறுங்க பாஸ்.. முறையாக வருவாங்க.. ஓட்டுப் போடும் அன்று, ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும், ஒவ்வொரு விஜியும் பூத், பூத்தாக காலையிலேயே வந்து நிற்பார்கள்.. அன்று தான் தெரியும்.. ஏன் தான் இந்த விஜய்யை கூப்பிட்டோம் என்று.. இப்படி பேசினால் இதென்ன சினிமா என்று ஆரம்பித்துவிடுவார்கள்.. நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விடமாட்டேன் என்கிறீர்கள்..
கருத்துக் கணிப்பு என்று சிலர் எடுக்கின்றனர்.. சிலர் நியாயமாக எடுக்கின்றனர்.. சிலர் கடுப்பில் கருத்துக் கணிப்பில் எடுக்கின்றனர்.. ஒவ்வொரு ஊர் ஊராக, தெருத் தெருவக வீடு வீடாக சென்று கருத்துக்கணிப்பை எடுத்துப் பாருங்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றி கழகம் தான் இருப்பதை பார்ப்பீர்கள்..
நம்ம சி.எம். சார் ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசும் போது அவர்களின் கட்சியினர் செய்யும் சில அடாவடிகளால் இரவில் தூக்கமே வரவில்லை என்று கூறியிருந்தார்.. அப்படி அவர் ஒரு நாள் அசந்து தூங்கும் போது, அவரிடம் போய், எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுவீங்க என்று கேட்டுப்பாருங்கள்.. தூக்கத்தில் கேட்டால் கூட விசில் சின்னத்திற்கு தான் ஓட்டுப்போடுவேன் என்று சொல்வார்.. தவெக சிட்டியில் தான் இருக்கிறது.. கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த டெஸ்டை செய்து பாருங்கள்..” என்று தெரிவித்தார்..



