இதனால் தான் யாரும் எனக்கு பெண் கொடுக்கல… மனம் திறந்து பேசிய பிரபல நடிகர்!

w 1280h 720format jpgimgid 01h2z1nw55h7ct1k4ykjnqmkp7imgname 21 6152bb8c23631

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக சூப்பர் குட் பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரியிடம் மேலாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் பாவா லட்சுமணன். பின்னர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களிடையே பிரபலமான அவர், வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.


குறிப்பாக, ஆனந்தம், மாயி உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. ஆனால், காலப்போக்கில் உடல்நலக் குறைவு மற்றும் பிற காரணங்களால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்ததால், மருத்துவர்கள் அவரது காலின் விரல்களை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அதன்பிறகு ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் தங்குவதற்கு நிரந்தர வீடு கூட இல்லாத சூழல் உருவானது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவரை நேரில் சந்தித்து, எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். அதேபோல், லெஜண்ட் சரவணன் உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதியுதவி வழங்கினர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்தும் தொடர்ந்து உதவி செய்து வருவதாக பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கிய ரஜினிகாந்த், தற்போது மாதந்தோறும் தனது உதவியாளர் மூலம் ரூ.10,000 அவரது வங்கிக் கணக்கில் செலவுக்காக அனுப்பி வருவதாக கூறியுள்ளார். நடிகர் சியான் விக்ரமும் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 60 வயதான பாவா லட்சுமணன் இதுவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “நான் சினிமா துறையில் பணியாற்றியதால் யாரும் எனக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. நாங்கள் இரட்டை சகோதரர்கள். என் சகோதரருக்கோ அல்லது எனக்கோ ஒருவருக்குத்தான் திருமணம் நடக்கும் என்று கூறினர். ஒரு கட்டத்தில் என் அம்மா ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயிக்க முயன்றார். ஆனால், நான் சினிமாவில் மேலாளராக வேலை செய்கிறேன் என்று தெரிந்ததும், ‘சினிமாவில் வேலை செய்பவர்கள் தவறான பழக்கங்களில் இருப்பார்கள்’ என்ற தவறான எண்ணத்தால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு திருமணமே நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… ஹார்பிக் கொடுத்து மனைவி செய்த கொடூரம்!

Saranya

Next Post

இந்தியாவிலேயே நேர்மையான காதல் ஜோடிகள் வாழும் இடம் எது? எந்த ஊர்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! வைரலாகும் சர்வே ரிப்போர்ட்!

Tue Jul 7 , 2026
காதல் என்றாலே ஒருகாலத்தில் அழகு, இனிமை என்று பல வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் காதல் என்றாலே பலருக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. காதலுக்காக நடைபெறும் கொலைகள் ஒரு புறம் இருக்க, கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. காதல் என்றாலே அதில் உணர்வுகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்திருக்கும் என்ற நிலை […]
WhatsApp Image 2026 07 07 at 1.03.58 PM

You May Like