தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் தீயசக்தி திமுகவை தூய சக்தி தவெகவால் தான் வெல்ல முடியும் என்று கூறினார்.. மேலும் “ நம்ம விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.. விசில் சின்னம் இருக்கும் இடத்தில் தவெக இருக்கிறது என்று அர்த்தம். எனது அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தங்கைகள் தவெகவுக்கு ஓட்டுப்போடுவதை யாராலும் தடுக்க முடியாது.. ரத்த சொந்தமாக நம்மை நினைக்கிற நமது வகையறாக்களை எந்த கட்சியாலும் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது.. இதை ஓவர் கான்ஃபிடன்ஸில் பேசவில்லை..
இது தான் கள எதார்த்தம்.. தீய சக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியால் தான் முடியும்.. இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தான் மக்களின் ஒரே ஆப்ஷன்.. நோ டைவர்ஷன். இந்த டப்பா என்ஜின், ஓட்ட என்ஜின், எவ்வளவு என்ஜின் வந்தாலும், டாப் என்ஜின் தவெக தான்.. இதை மனிதில் வைத்து கொண்டு தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும்..
நமது மாபெரும் கூட்டணியான மக்கள் நம்மோடு தான் இருக்கின்றனர். நமது மக்கள் விசிலை ஊதுற ஊதுல இந்த தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெறிச்சு ஓடணும். அன்று ஜார்ஜ் கோட்டையில் ஆளுங்கட்சியாக தவெக எழும்.. உங்களோடு நான் இருக்கிறேன்.. என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள் இதற்கு மேல் என்ன வேண்டும்.. நம்பிக்கையோடு இருங்கள்.. வெற்றி நிச்சயம்.” என்று தெரிவித்தார்.



