காதலியுடன் ரூம் போட்டு உல்லாசம்..!! அந்த விஷயத்தை கேட்டு வெறியான காதலன்..!! கடைசியில் நடக்கக் கூடாத சம்பவம்..!!

Sex 2025 7

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர பொறியியல் பட்டதாரியான அர்ஜுன் மற்றும் மீரா ஆகியோரின் 6 மாத கால காதல், ரத்தக் கறையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், மீராவின் கடந்த காலம் குறித்த ரகசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இருவரும் விடுதி அறையில் இருந்தபோது, மீரா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் அர்ஜுனிடம் தெரிவித்துள்ளார்.


6 மாதங்களாக தான் உருகிக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்ற ஆத்திரத்தில், நிதானம் இழந்த அர்ஜுன் மீராவை தாக்கியுள்ளார். அவரது மார்பில் பலமாக தாக்கியதில், மார்பு எலும்புகள் முறிந்து நுரையீரலில் குத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மீரா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மீராவிடம் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் ஒரு சிறிய தாலியுடன் அர்ஜுன் வந்திருந்தார். ஆனால், மீராவின் உண்மையை அறிந்தவுடன் அந்த தாலி அவரது கழுத்தில் ஏறுவதற்குப் பதிலாக, மரணத்திற்கு காரணமாக மாறியது. மீரா மயக்கமடைந்ததை அடுத்து பயந்துபோன அர்ஜுன், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அடுத்த நாள் காலையில் ஹோட்டல் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோதுதான் இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.

அர்ஜுனின் வீட்டில் அவருக்கு வேறொரு மருத்துவப் பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. வரதட்சணையாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் கடைகள் வரவிருந்த நிலையில், மீராவின் மீதான காதலால் அனைத்தையும் உதறித் தள்ள அவர் தயாராக இருந்தார். ஆனால், ஒரு நிமிட கோபத்தால் மீராவின் உயிரை பறித்ததோடு, தனது பிரகாசமான எதிர்காலத்தையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தொலைத்துவிட்டு இப்போது கொலைக் கைதியாக நிற்கிறார்.

Read More : “அதுக்கு தான் நான் இருக்கேன்.. அவன் கூட ஏன் போன”..? காட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்..!! மடியில் கிடந்த மனைவியின் உடல்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

CHELLA

Next Post

ஜிம் போக தேவையில்லை.. தினமும் 5 நிமிடம் இதை செய்தால் போதும்..!! அகால மரணமடையும் அபாயம் 10% வரை குறையும்..!!

Tue Feb 3 , 2026
உடல் உழைப்பற்ற நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் செய்யும் ஒரு மிகச்சிறிய மாற்றம் நம் ஆயுளைப் பல ஆண்டுகள் நீட்டிக்கும் வல்லமை கொண்டது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 2026-ஆம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற ‘லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒருவர் தனது தினசரி வழக்கத்தில் கூடுதலாக வெறும் 5 நிமிடங்கள் மட்டும் நடப்பாரேயானால், அவர் அகால மரணமடையும் அபாயம் சுமார் 10 […]
Walking Routine

You May Like