நேற்று தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு பல்வேறு பாடல்களை பாடினார்.. தவெக தலைவர் விஜய்யும் வேல்முருகன் பாடும் போது மேடையில் நடனமாடினார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.. நேற்று மருதமலை மாமணியே என்ற முருகன் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றி வேல்முருகன் பாடியதாக கூறப்படுகிறது.. இதனால் முருக பக்தர்களின் மனம் புண்பட்டதாக கூறி நெல்லை காவல்துறையில் பாடகர் வேல்முருகன் மீது புகாரளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முருகன் பாடலை மாற்றி பாடியது குறித்து பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து பேசிய அவர் “ நான் எதார்த்தமாகவே பாடினேன்.. அதற்கும் தவெக தலைவர் விஜய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நான் பாடிக் கொண்டிருந்த போது உற்சாகப்படுத்துவதற்காக பாடினேன். முருக பக்தர்களை மனம் புண்படுவதற்காக நான் அப்படி பாடவில்லை.. தவெகவினர் யாருக்குமே இதற்கும் தொடர்பு இல்லை.. நான் தவறாக பாட வேண்டும் என்று நினைத்து பாடவில்லை.. ஒருவேளை நான் தவறாக பாடிவிட்டேன், என்று நினைத்தால் அவர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More : வரும் 6-ம் தேதி முதல் விருப்ப மனு.. தவெக தலைமை அறிவிப்பு..! பரபரக்கும் தேர்தல் களம்..!



