முட்டையை அதன் அபரிமிதமான ஊட்டச்சத்துக்களுக்காக ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கிறோம். புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முட்டை, இதய ஆரோக்கியம் முதல் கண் பார்வை மேம்பாடு வரை பல நன்மைகளை தருகிறது. இருப்பினும், முட்டையுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து உட்கொள்வது, அந்த நன்மைகளை தீமையாக மாற்றக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
1. முட்டையையும் தயிரையும் ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியமானதாகத் தோன்றலாம், ஆனால் அது செரிமான மண்டலத்திற்கு பெரும் சுமையை அளிக்கும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முட்டை புரதத்தின் கட்டமைப்பை மாற்றி, அஜீரணம் மற்றும் வயிற்று வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களையும் முட்டையுடன் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலத்தன்மை முட்டை புரதத்தைச் சிதைப்பதோடு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்று உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.
2. பலருக்கும் தேநீர் அருந்திக்கொண்டே முட்டை உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் உண்டு. ஆனால், தேநீரில் உள்ள ‘டானின்கள்’ (Tannins), முட்டையிலிருந்து உடல் பெற வேண்டிய இரும்புச்சத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கின்றன. இதனால் முட்டை சாப்பிட்டும் அதன் முழுப்பலனும் உடலுக்குக் கிடைப்பதில்லை. இதேபோல், சோயா பால் மற்றும் முட்டை கலவையும் ஆபத்தானது. சோயா பாலில் உள்ள சேர்மங்கள் முட்டை புரதத்தை உடல் ஜீரணிக்க விடாமல் தடுத்து, ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.
3. மது அருந்தும்போது முட்டையை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது கல்லீரல் மற்றும் செரிமானத்திற்குத் தீங்கு விளைவிக்கும்; இது சில சமயங்களில் நீர் போன்ற வயிற்றுப்போக்கிற்கும் காரணமாகலாம். மேலும், அதிக வினிகர் கலந்த ஊறுகாய்களை முட்டையுடன் சேர்த்துச் சாப்பிடுவது, அதன் இயற்கையான சுவையைக் கெடுப்பதோடு புரதச் சத்தையும் சீர்குலைக்கும். இனிப்பு கலந்த தானிய உணவுகளை முட்டையுடன் சேர்த்தால், அது ரத்தச் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி, நாள் முழுவதும் உங்களைச் சோர்வாக உணர செய்யும்.



