நவீன காலகட்டத்தில் தவறான உணவு பழக்கவழக்கங்களாலும், அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலருக்கும் உடல் எடை அதிகரித்து தன்னம்பிக்கை இல்லாமல் இருந்து வருகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வகையான மருந்துகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வந்தாலும் எளிதில் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கவலையில் உள்ளீர்களா?
ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். வைட்டமின் சி ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்து போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் ஜூஸாக தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இந்த ஜூஸில் கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கக்கூடாது. இவ்வாறு குடிப்பதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பையும் கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் செரிமான பிரச்சனையும் சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு உடல் எடை குறைப்பிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஆரஞ்சு பழத்தில் உள்ளது.
மேலும் ஆரஞ்சு பழத்தை இஞ்சி, மஞ்சள் இவற்றுடன் சேர்த்து அரைத்து குடித்து வரலாம். இந்த சாறில் உள்ள சத்துகள் தொப்பையை விரைவாக கரைக்க உதவுகிறது. காலை உணவிற்கு பதில் ஆரஞ்சை பலமாகவோ அல்லது ஜூஸாகவோ குடித்து வருவது உடல் எடை குறைப்பிற்கு நல்ல பலன் அளிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.