இந்திய குடியரசு தின விழாக்களுக்கு 1984ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்த ‘சாரட் வண்டி’ அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது. இன்று நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக, தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு, அணிவகுப்பைக் காண பிரதமர் கடமை பாதைக்கு (கர்தவ்யா) பாதையில் உள்ள மேடைக்கு சென்றார். அப்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அணிவகுப்புக்காக பாரம்பரிய “சாரட் வண்டி” ரதத்தில் கடமை (கர்தவ்யா) பாதையில் பயணித்து வந்தனர். இந்த சாரட் வண்டி 40 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த 75-வது குடியரசு தினத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
1984ஆம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குடியரசுத் “சாரட் வண்டி” அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இது நிறுத்தப்பட்டது. பின்னர் ஜனாதிபதிகள் பயணத்திற்கு லிமோசின்களைப் (சொகுசு வாகனங்கள்) பயன்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.