தெலங்கானா மாநிலத்தின் கிராமம் ஒன்றில், சாயிலு – வினோதா தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகவே விரிசல் நிலவி வந்துள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சாயிலு, அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில், இயற்கை உபாதையை காரணம் காட்டி வினோதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சந்தேகம் வலுக்கவே, ஒரு கோடாரியை மறைத்து எடுத்துக்கொண்டு சாயிலு அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இருள் சூழ்ந்த வயல்வெளிக்கு நடுவே, வினோதா தனது கள்ளக்காதலன் பாலேஷுடன் உல்லாசமாக இருந்ததை சாயிலு நேரில் பார்த்துள்ளார்.
இதனால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சாயிலு, தான் கொண்டு வந்த கோடாரியால் பாலேஷை தாக்கினார். தலையில் பலமாக விழுந்த வெட்டில், பாலேஷ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த வினோதா, ஆடை கூட அணியாமல் அங்கிருந்து இருட்டில் அலறியபடி ஓடி மறைந்துள்ளார். கொலை செய்த வேகத்திலேயே காவல் நிலையத்திற்கு சென்ற சாயிலு, “நான்தான் பாலேஷை கொன்றேன்” என்று கூறி சரணடைந்தது போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.
தற்போது சாயிலு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாலேஷின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அந்தப் பதற்றமான சூழலில் அங்கிருந்து ஓடிச் சென்ற வினோதா இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார்? உயிருடன் இருக்கிறாரா? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.



