2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும் எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது.. தவெக ஆட்சியமைக்க மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. எனவே தவெக விசிக, கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக ஆதரவு கோரி உள்ளது.. தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது தொடர்பான நிலைப்பாட்டை திருமாவளவன் அறிவிப்பார் என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக தொடர்வதாகவும் இனிமேலும் தொடரும் என்றும் கூறியிருந்தார்..



