Flash : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.4,640 குறைந்த தங்கம் விலை..! வெள்ளி விலையும் ரூ.20,000 சரிவு..!

gold jewlery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.580 குறைந்து ரூ.14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று சவரனுக்கு ரூ.4,640 குறைந்து, ரூ.1,14,560-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து, ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : கவனம்..! தமிழ்நாட்டில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய்..! சென்னையில் தான் மிக அதிகம்..! அதிர வைக்கும் தகவல்..!

RUPA

Next Post

” தமிழ் பிச்சை எடுக்க உதவாது..” கமல் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் அலுவலகம் மறுப்பு..!

Thu Feb 5 , 2026
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்.. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் […]
Kamal Haasan Nirmala 1 1

You May Like