Breaking : வருமான வரித்துறை ரூ. 1.50 கோடி அபராதம் விதித்தது சரிதான்.. விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!

vijay chennai high court

கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது.


இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு, வருமானத்தை மறைத்ததற்கான ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.. தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது..

இந்த நிலையில் விஜய் தாக்கல் வழக்கில் இறுதி விசாரணை கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.. அப்போது விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.. ஆனால் காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்திற்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வருமான வரிச் சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான்.. எனவே விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்..

இந்த நிலையில் 1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. அபராதத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக விஜய் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வருமான வரித்துறை விதிகளுக்கு உட்பட்டு தான் அபராதம் விதித்துள்ளது என்றும், அபராதம் விதித்தது சரிதான் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

Read More : Breaking : கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..! ரிசர்வ வங்கி அறிவிப்பு..!

RUPA

Next Post

உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்..! சிம்பிள் டிப்ஸ் இதோ..!

Fri Feb 6 , 2026
எடையைக் குறைக்கும் விஷயத்தில், பலர் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் கடுமையாகக் குறைப்பது, உணவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைவாகச் சாப்பிடுவது போன்றவையே சரியான அணுகுமுறை என்று நினைக்கிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுவதில்லை. மாறாக, இது ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல் பலவீனம் மற்றும் சில நேரங்களில் எடை அதிகரிப்புக்கு கூட வழிவகுக்கும். சரியான அணுகுமுறை என்பது சமச்சீர் உணவோடு சரியான அளவு கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதே ஆகும். […]
Weight Loss 2025

You May Like