காலை நேரம் அவசரமாக இருக்கும் போது, உடலுக்கு தேவையான சத்துகளை தவறவிடுவது சாதாரணம். ஆனால், அதிக புரதச்சத்து நிறைந்த காலை உணவுகள் உடலுக்கு நீண்ட நேர ஆற்றலை அளித்து, கவனத்தை மேம்படுத்தி, மதியத்திற்கு முன் வரும் பசியையும் கட்டுப்படுத்த உதவுகின்றன. வேலைக்குச் செல்லும் முன் சுலபமாக தயாரிக்கக்கூடிய சில சிறந்த காலை உணவுகளை இங்கே பார்க்கலாம்.
ஒவர் நைட் ஓட்ஸ்: முந்தைய இரவே தயார் செய்யக்கூடிய ஓவர்நைட் ஓட்ஸ் மிகவும் வசதியானது. இதில் புரோட்டீன் பவுடர் சேர்த்தால், இது முழுமையான சத்தான உணவாக மாறும். அதேபோல் முட்டை, தசை ஆரோக்கியத்திற்கும் நீண்ட நேர ஆற்றலுக்கும் தேவையான முழுமையான புரதத்தை வழங்குகிறது. அவகாடோ சேர்த்தால், அது நல்ல கொழுப்புச் சத்தை வழங்கி, பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்த உதவும்.
ஸ்மூத்தி: சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய ஸ்மூத்திகளும் ஒரு சிறந்த தேர்வு. வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் வாழைப்பழம் சேர்த்து தயாரிக்கும் ஸ்மூத்தி, சுவையுடனும் சக்தியுடனும் இருக்கும். இது காலை நேரத்தில் உடனடி ஆற்றலை தரும்.
பனீர்: பனீர் பயன்படுத்தி தயாரிக்கும் காலை உணவுகள் மிகவும் திருப்திகரமானவை. காய்கறிகளுடன் சேர்த்து ரோல் அல்லது ராப் வடிவில் எடுத்துச் செல்லலாம். அதேபோல் முளைக்கட்டிய தானியங்கள் (sprouts) புரதமும் நார்ச்சத்தும் நிறைந்தவை. இதை சாட் போல செய்து சாப்பிடலாம்.
தயிர்: கிரீக் தயிர் ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இதில் புரதத்துடன், குடல்நலத்திற்கு உதவும் probiotics-உம் உள்ளன. இதற்கு பெர்ரி பழங்கள் மற்றும் விதைகள் சேர்த்தால், சுவையுடன் கூடுதல் சத்தும் கிடைக்கும். இவ்வாறு எளிமையான ஆனால் சக்திவாய்ந்த காலை உணவுகளைத் தேர்வு செய்வது, உங்கள் நாள் முழுவதையும் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் மாற்றும்.
Read more: அலர்ட் மக்களே.. LPG சிலிண்டர் முன்பதிவு முதல் விலை வரை.. மே 1 முதல் புது ரூல்ஸ்..!



