மெத்தையை விட மேலானது..!! உடல் உஷ்ணம் முதல் ரத்த ஓட்டம் அதிகரிப்பு வரை..!! பாயில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Sleeping 2026

நவீன காலத்தில் பஞ்சு மெத்தைகளின் வரவு அதிகரித்துவிட்ட போதிலும், நமது முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்விற்காக பயன்படுத்திய பாய்களின் மகிமை இன்றும் குறையவில்லை. பாய் என்பது வெறும் படுக்கை விரிப்பு மட்டும் அல்ல; அது உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்கும் ஒரு இயற்கை சாதனம் ஆகும். உடலில் உருவாகும் அதிகப்படியான சூட்டை உள்வாங்கி, உடல் உஷ்ணத்தை நிலைக்குக் கொண்டு வரும் அற்புதமான தன்மை பாய்க்கு உண்டு.


மெத்தையில் உறங்குவதை விட, தரையில் பாய் விரித்துப் படுப்பது வாதத்தை கட்டுப்படுத்தும் என மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. இது சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுப்பதோடு, நினைவுத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. பாயில் உறங்கும்போது மார்பக தசைகள் தளர்ந்து விரிவடைவதால், சுவாசம் சீராகி மன அமைதி உண்டாகிறது. முறையான ஓய்வும், ஆழ்ந்த உறக்கமும் கிடைப்பதற்கு இயற்கையான பாய்களே சிறந்த தேர்வாக அமைகின்றன.

நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட ஒரு பாய், சுமார் மூன்று ஆண்டுகள் வரை தனது இயற்கை தன்மையை இழக்காமல் இருக்கும். ‘பாய் இல்லா சீர்வரிசை கிடையாது’ என்ற முதுமொழியே, தமிழர்களின் கலாச்சாரத்திலும் வாழ்வியலிலும் பாய்க்கு இருந்த முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப இன்று பாய்களும் பல்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து வந்தாலும், அதன் அடிப்படை நன்மைகள் மாறாமல் உள்ளன.

Read More : கடைசி இரவாக மாறிப்போன முதலிரவு..!! மனைவிக்கு அந்த இடத்தில் அறுவை சிகிச்சை..!! ஆடிப்போன கணவன்..!! அம்பலப்படுத்திய RTI..!!

CHELLA

Next Post

ஆண்களே..!! விந்தணுக்களை அதிகரிக்க இந்த அரிசியை மட்டும் சாப்பிடுங்க போதும்..!! தாம்பத்தியத்தில் விளையாடலாம்..!!

Mon Feb 9 , 2026
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் அரிசிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில், உடல் வலிமைக்கும் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு ரகமாக ‘மாப்பிள்ளை சம்பா’ அரிசி திகழ்கிறது. இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் : சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, வெறும் உணவாக மட்டுமல்லாமல் ஒரு மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. இதில் […]
Mappillai Samba 2026

You May Like