தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது..
இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது ஏன் என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பெ. சண்முகம், வீரபாண்டியன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய அவர்கள் ” இன்னொரு தேர்தலை தவிர்க்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையை தடுக்க, தவெகவை ஆதரிக்கிறோம்.. தவெக ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறோம்.. தவெக உடன் கூட்டணி இல்லை.. திமுக உடன் கூட்டணி தொடர்கிறது.. ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முற்படும் போது திமுக உடன் இணைந்து போராடுவோம்..
தேர்தலில் தோல்வி அடைந்த போதும் ஒன்றிய பாஜக அரசு கொல்லைப்புறம் வழியே நுழைய முயற்சி செய்கிறது.. இன்னொரு தேர்தலை தவிர்க்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையை தடுக்க தவெக ஆதரிக்கிறோம். நாங்கள் தன்னிச்சையாக இயங்கும் கட்சி, திமுகவின் ஒப்புதல் எங்களுக்கு தேவையில்லை.. அமித்ஷா ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு.. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக விஜய் இனி குரல் எழுப்ப வேண்டும்.. விஜய்க்கு மக்கள் வாய்ப்பளித்திருக்கிறார்கள்.. அது இடதுசாரிகளால் தடைப்பட்டு விடக்கூடாது..” என்று தெரிவித்தார்..



