என்ன ஆச்சு..? சரத் பவார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

Sharad Pawar 3

முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தொண்டை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இருமல் காரணமாக புனேயில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


என்சிபி (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தொண்டை தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர் ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவரது நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயநோய் நிபுணரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் பர்வேஸ் கிராண்ட் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார். “அவர் வந்தவுடன், ஒரு மருத்துவக் குழு அவரைப் பரிசோதிக்கும், அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்,” என்று டாக்டர் கிராண்ட் கூறினார்.

சரத் பவார் வாய் புற்றுநோயிலிருந்து மீண்டவர். அவருக்கு 1990-களின் பிற்பகுதியில் அந்த நோய் கண்டறியப்பட்டது. அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அவர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.

RUPA

Next Post

20 பெண்களை கருவுறச் செய்து, 'ஆகச்சிறந்த மனித இனத்தை' உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்..! அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள்..!

Mon Feb 9 , 2026
மறைந்த பாலியல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஃபைலஸ் சமீபத்தில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த ஆவணங்களில் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர்.. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் இருந்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.. இந்த நிலையில் எப்ஸ்டீன் பற்றிய மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர் மனிதர்களின் “ஆகச்சிறந்த இனம்” (Super-race) ஒன்றை உருவாக்கும் நோக்கில் மரபணு […]
Jeffrey Epstein New Mexico ranch 1

You May Like