கோபுர கலசங்களுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம்..!! 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்துவது இதற்கு தானா..?

Temple 2026 1

ஆன்மீக அடையாளமாக பார்க்கப்படும் கோயில் கோபுரக் கலசங்களுக்குப் பின்னால், ஒரு மாபெரும் உயிர் காக்கும் அறிவியலும், பேரிடர் மேலாண்மையும் ஒளிந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா..? கோயில் கோபுரங்களின் உச்சியில் இருக்கும் கலசங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு பாதுகாப்பு கருவியாக செயல்படுகின்றன.


இந்த கலசங்களுக்குள் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை மற்றும் எள் போன்ற பல்வேறு தானியங்கள் நிரப்பப்படுகின்றன. முன்னோர்கள் இந்தக் கலசங்களில் தானியங்களை நிரப்புவதற்கு மிக முக்கியமான காரணமாக அறிவியல் ரீதியாக சொல்லப்படுவது மின்னல் பாதுகாப்பு.

குறிப்பாக, இதில் சேர்க்கப்படும் வரகு தானியத்திற்கு மின்னலை தாங்கும் அதீத ஆற்றல் உண்டு. இடி மின்னல் தாக்கும்போது, அது ஒரு ‘லைட்னிங் அரெஸ்டர்’ (Lightning Arrester) போல செயல்பட்டு, மின்சாரத்தை ஈர்த்துப் பூமிக்குக் கடத்தி, ஊரையும் மக்களையும் பாதுகாக்கிறது.

மற்றொரு ஆச்சரியமான விஷயம், இது ஒரு அவசரகால தானிய இருப்பாகச் செயல்படுவதுதான். இயற்கை சீற்றங்களோ அல்லது பெரும் வெள்ளமோ ஏற்பட்டு விவசாயமே முற்றிலுமாக அழிந்து போனால், அந்த இக்கட்டான சூழலில் மீண்டும் விவசாயத்தை தொடங்க தேவையான விதைகள் இந்தக் கலசங்களிலிருந்து எடுக்கப்படும். கோபுர கலசத்திலுள்ள தானியங்களை பயன்படுத்தி மீண்டும் பயிர் செய்ய முடியும்.

ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு..?

கலசத்தில் இருக்கும் தானியங்களுக்கு 12 ஆண்டுகள் வரை மட்டுமே முளைக்கும் திறன் அல்லது வீரியம் இருக்கும். அதற்குப் பிறகு அந்த தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும். இதன் காரணமாகவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு என்ற பெயரில் விழா நடத்தி, பழைய தானியங்களை நீக்கிவிட்டுப் புதிய தானியங்களை நிரப்பும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளனர்.

Read More : செவ்வாய் கிரகத்திற்கு ‘டாடா’..!! நிலவில் சரித்திரம் படைக்கும் எலான் மஸ்க்..!! 10 ஆண்டுகளுக்குள் பிரம்மாண்ட நகரம்..!!

CHELLA

Next Post

உடலின் இந்த பாகங்கள் தான் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை..! கவனிக்காம விட்டால், உயிருக்கே ஆபத்து..!

Mon Feb 9 , 2026
சமீபகாலமாக உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் காணப்பட்ட இந்த நோய், இப்போது நமது நாட்டின் கிராமங்களிலும் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், மனித உடலில் எந்த உறுப்பிலும் புற்றுநோய் ஏற்படலாம். அது பின்னர் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அதை விரைவாகக் குணப்படுத்த முடியும். நமது உடலில் எந்தெந்த […]
Cancer Cell Biology Genetics Art Concept 1

You May Like