சொத்து முதல் கார் வாங்குவது வரை..!! இனி இதற்கெல்லாம் பான் கார்டு தேவையில்லை..!! ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது புதிய சட்டம்..!!

Pan Card 2025

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம், சாமானிய மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் பான் (PAN) எண்ணைக் குறிப்பிடுவதற்கான வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


வங்கிக் கணக்கு மற்றும் ரொக்கப் பரிவர்த்தனை :

தற்போதைய நடைமுறையின்படி, ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், புதிய வரைவு விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யும்போது அல்லது திரும்ப எடுக்கும்போது மட்டுமே பான் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இது தினசரி சிறிய அளவிலான ரொக்கப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.

வாகனம் மற்றும் சொத்து வாங்குவோருக்கு சலுகை :

சொத்து சந்தை மற்றும் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் பான் எண் தொடர்பான உச்சவரம்பு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் மோட்டார் வாகனங்கள் வாங்கினால் பான் எண் தேவைப்பட்டது; தற்போது இந்த வரம்பு அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல், அசையா சொத்துக்களை வாங்கும்போது அல்லது விற்பனை செய்யும்போது 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் பான் எண் வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இனி இந்த வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினர் சொத்து வாங்குவதில் இருந்த கெடுபிடிகளைக் குறைக்கும்.

சுப நிகழ்ச்சிகள் மற்றும் ஹோட்டல் பில்கள் :

திருமணம், கண்காட்சிகள் அல்லது முக்கிய நிகழ்வுகளை ஹோட்டல்கள் மற்றும் மண்டபங்களில் நடத்தும்போது, பில் தொகை 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டினாலே பான் கார்டு கேட்கப்பட்டது. இனி அந்த கவலை தேவையில்லை. இந்த வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் வேளையில், இத்தகைய நடைமுறை மாற்றங்கள் மக்களின் அன்றாட நிதிச் செயல்பாடுகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : காலையில் ஆரோக்கியமான உணவு சாப்பிடணுமா..? அப்படினா கண்டிப்பா இதை டிரை பண்ணி பாருங்க..!! செம ரிசல்ட்..!!

CHELLA

Next Post

சூரியன் பெயர்ச்சி..! இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்..! அதிகார இழப்பு, வருமான இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்..

Tue Feb 10 , 2026
இந்த மாதம் 13 முதல் மார்ச் 14 வரை, சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். கும்ப ராசியில் சூரியனின் சஞ்சரி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு சில கஷ்டங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கஷ்டங்களுக்கு ஆளாகும் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், ஆதித்ய ஹிருதயத்தை அடிக்கடி பாராயணம் செய்வதால் நன்மை அடைவார்கள். சூரியன் கெட்ட இடங்களில் சஞ்சரித்தால், அதிகாரிகள், அரசாங்கம், […]
zodiac

You May Like