பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ஜப்பான்..!! 46 பேர் உயிரிழப்பு.. 193 பேர் கவலைக்கிடம்..!! நடுங்கும் மக்கள்..!!

Japan 2026

ஜப்பானின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு, அந்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. ஜப்பான் அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, இந்தப் பனிப்பொழிவு தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 193 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பனிப்பொழிவின் தாக்கம் நீகாட்டா (Niigata) மாகாணத்தில்தான் மிக கொடூரமாக உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். பொதுவாக, ஜப்பானின் இந்தப் பகுதிகளில் பனிப்பொழிவு என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த ஆண்டு பெய்து வரும் பனியின் அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமாக உள்ளது. வீடுகளின் மேற்கூரையில் படிந்துள்ள டன் கணக்கிலான பனியை அகற்றும்போதும், வழுக்கும் சாலைகளில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதுவதாலும் தான் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இன்னொரு பக்கம், ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பனிப்பொழிவு அலை, பிப்ரவரி 8-ஆம் தேதி டோக்கியோ நகரையும் எட்டியது. அங்கு சுமார் 5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) அளவிற்குப் பனி பெய்துள்ளது. தலைநகரைப் பொறுத்தவரை பனிப்பொழிவு என்பது அரிதான நிகழ்வு என்பதால், மக்கள் இதனை வியப்புடன் பார்த்தாலும், சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளில் இது சிறிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்தாலும், வானிலை இன்னும் சீராகாதது அதிகாரிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Read More : BREAKING | சூடுபிடித்த தேர்தல் களம்..!! ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அதிகாரிகள் இடமாற்றம்..!! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

CHELLA

Next Post

இலவச கேஸ் சிலிண்டர், அடுப்பு.. பெண்களுக்கு குட்நியூஸ் சொன்ன மத்திய அரசு..! இப்படி விண்ணப்பிக்கவும்..!

Tue Feb 10 , 2026
ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, அனைவருக்கும் சமையல் கேஸ் கிடைக்கச் செய்வதற்காக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் கூடுதல் சலுகைகளை அரசு வழங்குகிறது. முதல் முறையாக எரிவாயு இணைப்பு பெறுபவர்களுக்கு, எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 300 மானியம் […]
free gas ujwala

You May Like