கூட்டணி ஆட்சிக்கு நோ..!! ஓபிஎஸும் கிடையாது.. சசிகலாவும் கிடையாது..!! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி..!!

Eps

தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அடிமை என்று முத்திரை குத்தும் திமுகவினர், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்களை அடகு வைத்துவிட்டு அடிமையாக செயல்படுவது யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகள் யாரும் ஆட்சியில் பங்கு கோரவில்லை.


2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் களம் கண்டு, தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்” என்று தெரிவித்தார். இதன் மூலம், கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தாண்டி, ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. டிடிவி தினகரன் உடனான கருத்து வேறுபாடுகள் குறித்துப் பெரிய அளவில் ஏதுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் இறுதியானவை என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

அதிமுக ஒரு வலிமையான எஃகு கோட்டையாக திகழ்வதாக குறிப்பிட்ட அவர், தொண்டர்களின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் அதிமுகவிற்குப் பக்கபலமாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த கால சாதனைகளையும், திமுக ஆட்சியின் தோல்விகளையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து வருவதாகவும், வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை அதிமுக அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read More : குலதெய்வம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டுமா..? அப்படினா மறக்காமல் இதை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

பறவைக் காய்ச்சல் பீதி..!! கோழி இறைச்சி விலை அதிரடி சரிவு..!! முட்டை விலையும்..!! அசைவ பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!!

Thu Feb 12 , 2026
சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக […]
Egg 2025

You May Like