பறவைக் காய்ச்சல் பீதி..!! கோழி இறைச்சி விலை அதிரடி சரிவு..!! முட்டை விலையும்..!! அசைவ பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!!

Egg 2025

சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


பறவைக் காய்ச்சல் செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருவதால், அசைவ பிரியர்கள் மத்தியில் கடும் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக கோழி இறைச்சி விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ. 280-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சி, தற்போது ரூ. 220-ஆக குறைந்துள்ளது. வெறும் 72 மணி நேரத்தில் கிலோவிற்கு ரூ. 60 வரை விலை சரிந்தும், விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இறைச்சியை தொடர்ந்து முட்டை விற்பனையிலும் சரிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Read More : கூட்டணி ஆட்சிக்கு நோ..!! ஓபிஎஸும் கிடையாது.. சசிகலாவும் கிடையாது..!! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி..!!

CHELLA

Next Post

உங்கள் காதலிக்கு கொடுக்கும் ரோஜா இவ்வளவு தூரம் கடந்து வருகிறதா..? வியக்க வைக்கும் தகவல்கள்..!!

Thu Feb 12 , 2026
காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள் தான். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மலர் சந்தைகள் இப்போதே ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களுக்கான தேவை உச்சத்தை தொடும் நிலையில், இத்தனை கோடி மலர்கள் எங்கிருந்து வருகின்றன? இது இறக்குமதியா அல்லது உள்நாட்டு உற்பத்தியா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உண்மை என்னவென்றால், ரோஜா உற்பத்தியில் இந்தியா ஒரு […]
Rose 2026

You May Like