பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை.. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடுத்தது.. இந்த வழக்கு விசாரணையில் சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது.. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்ததுடன், தனி நீதிபதி மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
சட்டப்போராட்டம் தாமதாமனதால் வழக்கை வாபஸ் பெற்ற சென்னை உயர்நீதிமன்றம், ஜனநாயகன் படத்தை மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பி உள்ளது.. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எப்போது வெளியாகும் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது..
ஒருபுறம் இந்த பிரச்சனை என்றால், மற்றொரு பக்கம் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.. விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் டெல்லி சென்று சிபிஐ முன்பு ஆஜராகி திரும்பி உள்ளார்.. கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியானது..
இந்த நிலையில் விஜய்க்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.. சென்னை தேனாம்பேட்டையில் தவெக தேர்தல் வியூக அலுவலகமான ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ செயல்பட்டு வருகிறது.. இந்த அலுவலகம் செயல்படும் கட்டடம் கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரான லாட்டரி மார்டினுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது..
ஆதவ் அர்ஜுனா, தனது மாமனார் மார்ட்டினிடம் முறையாக அனுமதி பெற்றே இந்த அலுவலகத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.. ஆனால், இப்போது திடீரென அலுவலகத்தை காலி செய்யுமாறு உத்தரவு போட்டுள்ளார்.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென அலுவலகத்தை காலி செய்ய சொன்னால் எங்கே போக முடியும்? தேர்தல் வரை அதே இடத்தில் அலுவலகம் செயல்பட ஆதவ் அர்ஜுனாவும் அவகாசம் கேட்டாராம்.. ஆனால் அவகாசம் தர முடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம்.. இதனால் தவெக தேர்தல் வியூக அலுவலகத்திற்கு புதிய இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது..
Read More : யாருடன் கூட்டணி..? ஒரே நேரத்தில் திமுக, அதிமுக உடன் பேச்சுவார்த்தையா? பிரேமலதா காட்டமான பதில்..!



