பாகுபலி, கேஜிஎஃப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் 2-வது பாகங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளன. இந்த 2-ம் பாக பாடங்கள் மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளன. சமீபத்தில், துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது.
ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.. இந்த படம் உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. இந்தியில் மட்டும் ரூ.1,000 கோடியை உள்நாட்டு நிகர வசூலில் தாண்டிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.. துரந்தர் படத்தின் 2-வது பாகம், அடுத்த மாதம் வரவுள்ளது. துரந்தர் 2, முந்தைய சாதனைகளை முறியடிக்குமா? இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய சீக்வல் (Sequel) அதாவது 2-வது பாக படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடார் 2
அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல் நடித்த ‘கடார் 2’ படம் 2023 இல் வெளியிடப்பட்டது. இதில் அமீஷா படேல், உத்கர்ஷ் சர்மா, சிம்ரத் கவுர், மனிஷா வாத்வா மற்றும் கௌரவ் சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.691.08 கோடியை வசூலித்தது. இது நாட்டில் அதிக வசூல் செய்த 7வது சீக்வல் படமாகும்.
2.0
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘2.0’ திரைப்படம் நாட்டில் அதிக வசூல் செய்த 6-வது சீக்வல் படமாகும். 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2.0 உருவானது.. இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்த இந்தப் படம் உலகளவில் ரூ.723 கோடியை வசூலித்தது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.
ஸ்த்ரீ 2
ஸ்த்ரீ 2 என்பது 2024 இல் வெளியான ஒரு நகைச்சுவை திகில் படம். இதை அமர் கௌசிக் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா ஆகியோர் நடித்த இந்தப் படம் உலகளவில் ரூ.874.58 கோடியை வசூலித்தது. நாட்டில் அதிக வசூல் செய்த சீக்வல் படங்களின் பட்டியலில் இது 5வது இடத்தைப் பிடித்தது.
காந்தாரா 2
‘காந்தாரா: எ லெஜண்ட் அத்தியாயம் 1’.. என்பது 2025 இல் வெளியான ஒரு கன்னட புராண ஆக்ஷன் திரைப்படமாகும். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியிருந்தார்.. ரிஷப்புடன், இந்தப் படத்தில் ஜெயராம், ருக்மணி வசந்த் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் உலகளவில் ரூ.850-900 கோடிகளை வசூலித்தது. இது நாட்டில் நான்காவது அதிக வசூல் செய்த சீக்குவல் படமாகும். கதை களத்தின் படி காந்தாரா படத்தின் ப்ரீகுவலாக இந்த படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது..
கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் சேப்டர் 2′ 2022 இல் ஒரு பீரியட் ஆக்ஷன் படமாக வெளியானது. இதை பிரசாந்த் நீல் எழுதி இயக்கியுள்ளார். இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், அர்ச்சனா ஜோயிஸ், ஷரன் சக்தி, ஈஸ்வரி ராவ், ஜான் கோக்கன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1250 கோடி வசூலித்தது. இந்த படம் கன்னட சினிமாவின் திசையை மாற்றியது. நாட்டில் அதிக வசூல் செய்த சீக்வல் படங்களின் பட்டியலில் இந்த படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
புஷ்பா 2
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ நாட்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது சீக்வல் படமாகும். சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜகபதி பாபு, சுனில் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024 இல் வெளியான இந்தப் படம் உலகளவில் ரூ. 1642 கோடி வசூலித்துள்ளது.
பாகுபலி 2
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் நாட்டில் அதிக வசூல் செய்த சீக்வல் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் பிரபாஸ், ராணா டக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணா, சத்யராஜ், நாசர் மற்றும் சுப்பராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பீரியட் ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமாவாக உருவனா இந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.1810.60 கோடிகளை வசூலித்துள்ளது. அதிக வசூல் செய்த படமாக இது அமைந்தது..
Read More : 3 முறை திருமணம் செய்து கொண்ட தென்னிந்திய ஹீரோயின்கள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க..!



