பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீரா பாடல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுத்தீன் தாகர் இந்த வழக்கை தொட்ர்ந்திருந்தார்.. தனது தந்தை, நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடல் இருந்து, வீர ராஜ வீரா பாடலை நகலெடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மெட்ராஸ் டாகீஸ், லைக்கா புரொடக்ஷன் மீது காப்புரிமை மீறல் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.. அப்போது வீர, ராஜ, வீரா பாடல், சிவ ஸ்துதி பாடலின் அடிப்படை இசையமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது.. இது அசல் இசையமைப்பாளர்களின் காப்புரிமையை மீறும் செயலாகும்.. எனவே ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பொன்னியின் செல்வன் பட தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.2 கோடி அபராத தொகையாக டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கட்ட வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்ற இருவர் நீதிபதிகள் அமர்வில் ஏ.ஆர் ரஹ்மான தரப்பு மேல் முறையீடு செய்தது.. இந்த வழக்கை விசாரித்த அமர்வு, ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான ரத்து செய்து உத்தரவிட்டது.. இந்த உத்தரவை எதிர்த்து பாடகர் உஸ்தாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏ.ஆர். ரஹ்மான் ரூ.2 கோடி டெபாசிட் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக வெளியானது.. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..



