அவிட்டம் நட்சத்திரத்தில் வரும் மாசி அமாவாசை..!! தோஷம் நீங்கி உங்கள் குலம் செழிக்க இந்த வழிபாடு முக்கியம்..!!

Amavasai 2026

பித்ருக்களின் ஆசியைப் பெறுவதற்கு உகந்த தினமாக சொல்லப்படும் அமாவாசை திதி, மாதந்தோறும் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசைக்குத் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசையை போலவே, இன்று (செவ்வாய்க்கிழமை) மாசி மாத அமாவாசையும் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் மற்றும் தான தர்மங்கள் மூலம் குடும்பத்தில் நிலவும் தடைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.


96 தர்ப்பணங்களின் முக்கியத்துவம் :

இந்து சாஸ்திரங்களின்படி, ஒரு ஆண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ் மாதப் பிறப்புகள், கிரகண காலங்கள் மற்றும் புரட்டாசி மகாளய பட்ச நாட்கள் ஆகியவற்றோடு மாதந்தோறும் வரும் அமாவாசைகளும் இதில் அடங்கும். இந்த வரிசையில் மாசி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பது, பல தலைமுறைகளாக தொடரும் பாவங்களை நீக்கி, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய உதவும் என ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவிட்டம் நட்சத்திர சங்கமம் :

இந்த ஆண்டு மாசி அமாவாசை ‘அவிட்டம்’ நட்சத்திரத்துடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நன்னாளில் நதிக்கரைகள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது அனைத்துப் பாவங்களையும் போக்கும். குறிப்பாக, அவிட்டம் நட்சத்திரம் அமையும் இந்த நாளில் பித்ருக்களுக்குச் செய்யும் சிரார்த்தம், அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதோடு, பல ஆண்டுகள் தொடர்ந்து தர்ப்பணம் செய்த பலனை ஒரே நாளில் நமக்குத் தேடித்தரும் என்பது நம்பிக்கை.

வழிபாட்டு முறைகளும் பலன்களும் :

இன்று அதிகாலையிலேயே நீராடி, முன்னோர்களை தியானித்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளம் அல்லது கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பின், மாலையில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவைப் படைத்து வழிபடலாம். அன்னதானம் மற்றும் நீர் தானம் செய்வது பித்ருக்களின் மனதைக் குளிர்விக்கும். இதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும், திருமணத் தடைகள் நீங்கும் மற்றும் குழந்தை பாக்கியம் போன்ற நற்பலன்கள் கிட்டும்.

மாசி அமாவாசை நாளில் நதிக்கரைகளில் தெய்வங்களும் உறைவதாக நம்பப்படுவதால், புண்ணியத் தலங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுவது குலம் செழிக்க வழிவகுக்கும்.

Read More : ஜாதகத்தையும், சாதிப் பற்றையும் கைவிடும் இளம் தலைமுறை..!! எதிர்பார்ப்பது என்ன..? ஆய்வில் வெளியான சுவாரசிய முடிவுகள்..!!

CHELLA

Next Post

இதய பிரச்சனை, தோல் நோய்களை குணமாக்கும் அதிசய சிவன் கோயில்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

Tue Feb 17 , 2026
தமிழகத்தின் ஆன்மீக பூமியில் எண்ணற்ற சிவாலயங்கள் அருள்பாலித்தாலும், “பிணி தீர்க்கும் தலம்” என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். ‘வைத்தியன்’ என்றால் மருத்துவன், ‘ஈஸ்வரன்’ என்றால் கடவுள். உலகிற்கே மருத்துவராக திகழும் சிவபெருமான், இங்கு வைத்தியநாத சுவாமியாக வீற்றிருந்து பக்தர்களின் உடல் மற்றும் மன ரீதியான துயரங்களை துடைத்து வருகிறார். இதன் காரணமாகவே, இந்த ஊரே இறைவனின் திருநாமத்தால் ‘வைத்தீஸ்வரன் […]
Sivan Temple 2026

You May Like