தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1070 கோடி மதிப்பிட்டில் புதிய டைடல் பூங்காங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், நெல்லை, புதுக்கோட்டையில் அமையும் டைடல் பூங்காக்களால் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு..
கோவை மாவட்டத்தில் ரூ.81 கோடி ரூபாய் முதலீட்டில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு ரூ.4882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு
பசுமை மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் 1000 மெகாவாட் மின் கல சேமிப்பு திட்டம்
எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி நிதி ஒதுக்கீடு
5 ஆண்டுகளில் ரூ.6121 கோடியில் 12,087 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1885 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.8313 கோடியில் 4 வழித்தடமாக அகலப்படுத்தப்படுகின்றன..
மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது.. மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது..
புதிய மெட்ரோ திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது.



