முன்னாள் அமைச்சர் முன்னிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகயை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்…!

eps admk 2025

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். புதிய உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி கட்சித்துண்டு அணிவித்து வரவேற்றார்நாமக்கல் மாவட்டம் தூம்மங்குறிச்சியில் திமுகவை சேர்ந்த திரளானோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி மோகன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் அய்யாவு மற்றும் எருமைப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் பா. அலங்காநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் உள்ளிட்ட திரளானோர் திமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். கழகத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி கட்சித்துண்டு அணிவித்து வரவேற்றார்.

Read more: சர்வதேச யோகா தினம் இன்று!. என்னென்ன நன்மைகள்?. தெரிந்துகொள்ள வேண்டியவை இதோ!

maha

Next Post

பெரும் சோகம்!. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மாரடைப்பால் மரணம்!. பிசிசிஐ இரங்கல்!.

Tue Jun 24 , 2025
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]
cricketer dilip doshi 11zon

You May Like