தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து சில நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்..
இந்த நிலையில் அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்த பி.எம்.மன்னன் சற்றுமுன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மதுரையின் துணை மேயராகவும் இருந்த மன்னன் இன்று அதிமுகவில் இணைந்தார்.. கடந்த சில நாட்களாகவே மன்னன், அதிமுகவில் இணை உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
சென்னை பசுவமை வழிசாலையில் உள்ள இபிஎஸ்-ன் இல்லத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.. மன்னனின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் இன்று இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் முக்கிய புள்ளி அதிமுகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read More : ரூ.80 கோடி செலவு செய்துவிட்டு, ரூ.8000 கோடி செலவு என பட்ஜெட்டில் பொய்.. வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை..!



