நெருங்கும் தேர்தல்.. 10 நாட்களில் 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி..! பரபரக்கும் அரசியல் களம்..!

pm modi 2

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்..


இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். மேலும் தமிழகத்திற்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை என்று பிரதமர் கூறினார்.. ஆனால் தமிழகத்தில் இரட்டை என்ஜின் என்ற டப்பா என்ஜின் ஆட்சி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்..

இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் 10 நாட்களில் 3 முறை தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மார்ச் 1-ம் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.. இதை தொடர்ந்து பிரதமர் மோடி மார்ச் 6-ம் தேதி வேலூர் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.. மீண்டும் மார்ச் 11-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : சீன ரோபோ நாய் சர்ச்சை.. AI உச்சி மாநாட்டில் இருந்து உத்தரப்பிரதேச பல்கலைக்கழகம் வெளியேற உத்தரவு..! என்ன நடந்தது?

RUPA

Next Post

நடுத்தர மக்களுக்கு குட்நியூஸ்..! கேஸ் சிலிண்டர் விலை தாறுமாறாக குறையப் போகுது..! எவ்வளவு சேமிக்க முடியும்?

Wed Feb 18 , 2026
14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை குறைய வாய்ப்புள்ளது, இது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணத்தை அளிக்கும்.. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சமீபத்தில் உயர்ந்து வருவதால் நடுத்தர குடும்பங்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டை நிர்வகிப்பது கடினமாகிவிட்டது. இந்த சூழலில், எரிவாயு விலை குறையும் என்பதற்கான அறிகுறிகள் ஒரு பெரிய நிவாரணமாகும். சமையல் எரிவாயு கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான ஒரு அடிப்படைப் பொருளாகும். […]
Gas Subsidy 2025

You May Like