ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு விக்கெட்..? தவெகவில் இணையும் வெல்லமண்டி நடராஜன்..!! செங்கோட்டையனுடன் ரகசிய டீலிங்..!!

Vellamandi Natarajan OPS 2026

தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளுக்காக தயாராகி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. முறையான கூட்டணி உடன்பாடுகள் எட்டப்படாததால் ஓ.பி.எஸ் அணி மெல்ல மெல்ல வலுவிழந்து வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒரு சில விசுவாசிகளும் தற்போது மாற்றுப் பாதையைத் தேட தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், ஓ.பி.எஸ் அணியின் முக்கிய முகமாக அறியப்படும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விரைவில் அந்த அணியிலிருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல் தீயாகப் பரவி வருகிறது.


ஏற்கனவே, திமுக-வில் இணைவதற்காக வைத்திலிங்கம் வாயிலாக அவர் மேற்கொண்ட ரகசிய பேச்சுவார்த்தைகள் கைகூடவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த வெல்லமண்டி நடராஜன், தற்போது தனது பார்வையை விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பக்கம் திருப்பியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் அவர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக திருச்சி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ.பி.எஸ் அணியில் தொடர்வது தங்களின் அரசியல் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பாக இருக்காது என்று கருதும் முக்கிய நிர்வாகிகள் பலரும், தற்போது புதிய கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

ஒருவேளை வெல்லமண்டி நடராஜன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பட்சத்தில், அது திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அணிக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பலவீனத்தையே ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக தன்னுடன் இருந்த முக்கிய முகங்கள் ஒவ்வொன்றாக விலகிச் செல்வது, பன்னீர்செல்வத்திற்குத் தலைமைப் பொறுப்பில் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. தவெக-வின் அரசியல் வருகை பல பழைய அரசியல் கணக்குகளை மாற்றி எழுதி வரும் நிலையில், வெல்லமண்டி நடராஜனின் இந்த ரூட் மாற்றம் வெற்றியடையுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Read More : இறைவன் நம்மோடு பேசும் மொழி..!! கோயில்களில் நீங்கள் சாமி கும்பிடும்போது இந்த அறிகுறியை கவனிச்சிருக்கீங்களா..?

CHELLA

Next Post

கணவனுக்கு மதுவில் கை நிறைய வயாகரா மாத்திரையை கலந்து கொடுத்த மனைவி..!! உடனே ஓடிவந்த கள்ளக்காதலன்..!! அடுத்து நடந்த திருப்பம்..!!

Thu Feb 19 , 2026
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கத்தி சுரேஷ் என்பவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தனது மனைவி மௌனிகாவை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். குடும்பப் பொறுப்பின்றி மனைவியின் வருமானத்தை சுரண்டிய சுரேஷின் போக்கு, மௌனிகாவை தவறான பாதையில் தள்ளியுள்ளது. அஜய் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல், இறுதியில் தனது கணவனையே காவு வாங்கும் அளவிற்கு ஒரு பயங்கர திட்டமாக உருவெடுத்தது. சுரேஷின் மரணத்தை விபத்து அல்லது இயற்கை […]
Crime 2025 5

You May Like