Flash : குட்நியூஸ்.. இன்று மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.80 குறைந்து, ரூ.14,420க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.2160 அதிகரித்தது.. இந்த நிலையில் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு .2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : டபுள் ஜாக்பாட்..!! மீண்டும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.4,000..? திமுக அரசு போட்ட மெகா பிளான்..!!

RUPA

Next Post

எவ்வளவு முயற்சி செய்தாலும், ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியவில்லையா..? இந்த எளிய பணி சிக்கலை நீக்கும்..!

Fri Feb 20 , 2026
மத்திய அரசு பான்-ஆதார் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டில் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், நிதி சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிலர் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், ஆதாரை பான் கார்டுடன் இணைக்க முடியாது. இந்த விஷயத்தில், அந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதை பார்க்கலாம்.. பான்-ஆதார் இணைக்கப்படாததற்கு முக்கிய காரணம், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி […]
pan aadhaar

You May Like