தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது..
அதன்படி, இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.. மேலும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழ்நாடு வருகை தர உள்ளனர்.. வரும் 26, 27 ஆகிய 2 நாட்கள் தலைமை தேர்தல் ஆணைய குழுவினர் தமிழ்நாடு வருகின்றனர்.
இந்த குழுவினர் அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் சென்னையில் வைத்து ஆலோசனை நடத்த உள்ளனர்.. இதில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, தேர்தல் முன்னேற்பாடுகள், தேர்தல் தேதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.



