fbpx

“மதுர பளப்பளக்குது.. விஜய் கட்சி போஸ்ட்டர்..”! – மதுரையில் விஜய்யின் TVK கட்சி போஸ்ட்டர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த ஒரு வருடமாகவே விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் அதற்கான பதிலை நேற்று கட்சியின் பெயருடன் சேர்த்து வழங்கி இருக்கிறார் தளபதி விஜய்.

தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பின்னர் சமூகப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தி இன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கட்டமைத்திருக்கிறார் தளபதி விஜய். தேர்தல் ஆணையம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி மற்றும் சின்னம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. தளபதி விஜய் கட்சி தொடங்கியதில் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.

தீவிரவும் அரசியல் முடிவை எடுத்த தளபதி விஜய் கடந்த ஓராண்டாகவே அரசியல் பாதையை நோக்கி பயணிக்க தொடங்கினார். தனது விஜய் மக்கள் இயக்கத்தை 2021 ஆம் வருட உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க செய்தார். மேலும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருள் வழங்குதல் என அரசியல் கட்சிகளுக்கான அத்தனை முன்னெடுப்புகளையும் மேற்கொண்ட அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக தனது கட்சியையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் அரசியல் வருகையை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டி இருக்கும் போஸ்டர பலரது கவனத்தையும் ஈர்த்து இருப்பதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. “கழகங்கள் இனி கதறும் உன்னைப் பற்றி, திலகங்கள் உனக்கு இட இனிமேல் வெற்றி” என்ற வாசகத்துடன் இடம் பெற்ற போஸ்டரில் கழகங்கள் என்ற எழுத்துக்கள் திமுக அதிமுக தேமுதிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் வண்ணங்களை குறிப்பிடும் வகையில் அமைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போஸ்டர் மதுரை கிழக்கு தொகுதி நாராயணபுரத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்களால் ஊட்டப்பட்டுள்ளது.

Next Post

பாலியல் புகாரில் சிக்கிய Squid Game நடிகர்..!! 79 வயதில் சிறை தண்டனை விதிப்பு..!!

Sat Feb 3 , 2024
பிரபல Squid Game தொடரில் நடித்த ஓ யங் சூவுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி பேர்களால் பார்க்கப்பட்ட கொரியன் வெப் சிரீஸ் Squid Game. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த நடிகர் ஓ யங் சூ . 79 வயதான இவர் தென் […]

You May Like