சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.
அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளிண்ட்டன், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, மைக்கேல் ஜாக்சன் என பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில், நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்ஸ்டீன் ஆவணங்களில் லியோனார்டோ டிகாப்ரியோ
புதியதாக வெளிவந்த தகவல்களின் படி, எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் குறைந்தது 3 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் லியோனார்டோ நரமாமிச டயட்டில் இருந்ததாகவும், அவர் சுமார் 40 பவுண்ட் குழந்தைகள் மாமிசம் சாப்பிட்டதாகவும் பகீர் தகவல் உள்ளது.
ஒரு மின்னஞ்சலில், முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Peter Mandelson, டிகாப்ரியோ குறித்து எப்ஸ்டீனை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், எப்ஸ்டீனுடன் உள்ள உறவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியானதை அடுத்து, மாண்டல்சன் தனது தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர்மீது, பணம் பெற்றதாகவும், அரசின் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
அந்த மின்னஞ்சலில், “இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில், லியோனார்டோ டிகாப்ரியோ விளம்பரத்தை விரும்பக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? ரஷ்யா போன்ற நாடுகளிலும்… கார்கள் போன்ற பொருட்களுக்காக… அவர் அமெரிக்காவுக்கு வெளியான தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறார்”
என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீபக் சோப்ரா பெயரில் வந்த செய்திகள்
மேலும், 2016 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த சில குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், எப்ஸ்டீன் மற்றும் தீபக் சோப்ரா என்ற பெயரிலுள்ள கணக்குக்கு இடையில் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில், ஒரு இரவு உணவு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையத்தில் பரவும் சர்ச்சையான குற்றச்சாட்டுகள்
இதனிடையே, எப்ஸ்டீன் தொடர்பான தகவல்களில் அதிர்ச்சி தரும் “குறியீட்டு சொற்கள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “jerky”, “cream cheese baby” போன்ற சொற்கள் இடம்பெற்றதாகவும், புதிதாக பிறந்த குழந்தைகளை உண்ணுவது குறித்து பேசப்பட்டதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மேலும், நடிகர் உடி ஆலென் உள்ளிட்ட சில பிரபலங்களுடன் தொடர்புடைய உரையாடல்களில், டிகாப்ரியோ பெயரும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சட்டவிரோத குழந்தை கடத்தல் மற்றும் மனித மாமிசம் உண்ணும் (cannibalism) வலையமைப்பு பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது..
அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பெருமளவில் சல்பியூரிக் அமிலம் (sulfuric acid) ஆர்டர் செய்ததாகவும், அது ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் தொடர்ச்சியாக, டிகாப்ரியோ எப்ஸ்டீனுடன் சேர்ந்து மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை..
உண்மைச் சரிபார்ப்பு விளக்கங்கள்
ஆனால், X தளத்தில் வெளியான சில பதிவுகளில், “Community fact-check” குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், அமெரிக்க அரசு வெளியிட்ட “எப்ஸ்டீன் தொடர்புடைய ஆவணங்களில்” டிகாப்ரியோ பெயர் இடம்பெற்றது, எப்ஸ்டீன் மூன்றாம் நபர்களுடன் பேசிய போது அவர் பெயரை குறிப்பிட்டதாலேயே லியோனார்டோ பெயர் இடம்பெற்றது.. என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்புகளின்படி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மேற்கூறப்பட்ட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கும் பதிவுகளோ, ஆதாரங்களோ இல்லை. இணையத்தில் வைரலாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த நம்பகமான சான்றுகளும் இல்லை என்றும் அவை தெளிவுபடுத்துகின்றன.



