பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை We the Leader என்ற இயக்கத்தை தொடங்குவதாக இன்று அறிவித்தார்.. மேலும் “ தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் என்பதே என் ஆசை..” என்றும் கூறியிருந்தார்..
அண்ணாமலையின் புதிய இயக்கமான www.wetheleader.org என்ற இணயதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.. அதன்படி அண்ணாமலை புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட 5 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் இணைந்தனர்.. அதாவது ஒரு நிமிடத்திற்கு சுமார் 35 பேர் அவரது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.. We the Leader என இயக்கமாக தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்..
இந்த நிலையில் அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி! ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி – அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே,
அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



