தெற்கு மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.. என் வாக்குச்சாவடி, வெற்றிச்சாவடி என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.. இதையடுத்து உரையாற்றிய அவர் “ வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மடுரை, சாப்பாடு என்றால் மதுரை.. இங்கு எல்லாமே பேமஸ் தான்.. சித்திரை திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைகிறேன்.. இனி நாம தான். எப்போதுமே நாம தான்..
SIR பணிகளில் யாருடைய வாக்குகளையும் நீக்கவிடாமல் பம்பரமாக உழைத்த இயக்கம் தான் திமுக தான்.. சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப்போவது வாக்குச்சாவடி முகவர்களாகிய 7 லட்சம் பேர் தான்.. 2 மாதங்களில் 7 மாநாடுகளை நடத்தி உள்ளோம்.. இந்தியாவிலேயே திமுக மாதிரி அமைப்பு ரீதியான வலுவான அரசியல் கட்சியை யாராலும் காட்ட முடியாது.. இது வெறும் ட்ரெய்லர் தான்.. மார்ச் 9-ம் தேதி திருச்சியில் கூடப் போகிறோம்..
கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலை தொடங்கி அடுத்த மாதம் திருச்சி வரைக்கு 20 முதல் 25 லட்சம் பேரை நான் சந்திக்கப் போகிறேன்.. அதனால் நாம் ரெக்கார்டு செய்தால் யாராலும் பிரேக் பண்ண முடியாததாக இருக்க வேண்டும்..
திமுக போன்ற வலுவான கட்சியை யாராலும் மிரட்ட முடியாது. பெரியார், அண்ணா, கலைஞர் ரத்தமாகிய நம்மை சீண்டினால் தொட நினைத்தால், தமிழ்நாடே திருப்பி பதிலடி கொடுக்கும் என்ற பயம் எதிர்களை அஞ்சி நடுங்க வைக்கிறது..
இந்த தேர்தலில் ஒவ்வொரு பூத்திற்கும் 350 வாக்குகள் என்பது தான் டார்கெட், இதனை செய்தால் 2.50 கோடி வாக்குகளை பெற்றுவிடலாம்.. ஒவ்வொரு குடும்பத்தினரையும் 5 முறையாவது சந்திக்க வேண்டும்.. இதுவரை திமுகவிற்கு வாக்களிக்காத குடும்பத்தினரையும் சந்தித்து கொண்டு இருக்க வேண்டும்..
மக்கள் கேட்ட திட்டங்களையும் கொடுத்திருக்கிறோம், சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய திட்டங்களையும் கொடுத்திருக்கிறோம்.. பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.. இதனை ரிப்பீட் மோடில் செய்தால் வெற்றியும் ரிப்பீட் ஆகும்..
நமது திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள், திருநங்கைகள், நெசவாளர்கள், உழவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.. தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியை பெற்றுள்ளது.. இந்த வளர்ச்சி தான் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.. எனவே ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர வேண்டிய செய்தி என்னவென்றால், நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் தான் மகளிர் உரிமைத் தொகை போன்ற சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் தொடரும்..
அண்மையில் நாம் அட்வான்ஸாக வழங்கிய ரூ.5000 உரிமைத்தொகையை பல ஊடகங்களும், நமது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று சொன்னார்கள்.. எதிரிகள் கணிக்க முடியாதபடி நமது மூவ் இருந்தது.. காலையில் நாம் ஸ்வீட் சர்பிரைஸ் கொடுத்ததில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒன்றிய அரசின் மீது இருக்கும் பயத்தால் அந்த தொகையை உடனடியாக எடுக்க சென்றார்கள்.. இது தான் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், ஒன்றிய அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம்.. மக்களுக்கு கொடுத்தால் அது திமுக அரசு, மக்களிடம் இருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு.. மக்களிடம் இதை நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும்..
இலவச பேருந்து பயண திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவதாக பிரதமர் மோடி சொல்லி இருந்தார்.. இவ்வளவு அக்கறையோடு மெட்ரோ குறித்து பேசும் அவர், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் எங்கே என்று கேட்க வேண்டும்.. ஏன் தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்பு திட்டமும் வழங்கவில்லை என்று கேட்க வேண்டும்..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால் கோரிக்கையாக கூட இதை எல்லாம் கேட்க முடியாத துணிச்சல் இல்லாத துரோகியாக அவர் மாறிவிட்டார்.. ஆனால் நான் எடப்பாடி பழனிசாமி மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை..
ஆட்சி, பதவி மட்டும் இல்ல, உயிரே போனாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.. என்ன வழக்கு போடுவீர்கள்.. போடுங்கள்.. நாங்கள் பார்க்காத மிசாவா? நாங்கள் பார்க்காத தடாவா? இந்தியாவிலேயே திமுக அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அதிக நெருக்கடிகளை தருகின்றனர்.. எமெர்ஜென்ஸியை பார்த்த இயக்கம் திமுக.. சிபிஐ, ED, IT என எந்த சித்து விளையாட்டுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.. என்ன ஆனாலும் நாங்கள் எழுந்து நிற்போம்.. ஒரு கை பார்ப்போம்.. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தைரியாக போராடுவதால் மக்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர்.. அதனால் தான் எல்லா தேர்தல்களிலும் நாம் ஜெயித்து வருகிறோம்.. தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்ற இந்த போரில் தமிழ்நாடே வெல்ல வேண்டும்.. வெல்வோம் ஒன்றாக.. ” என்று தெரிவித்தார்..



